வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் : துமிந்த

கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில்  சிகிச்சை பெற்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று முற்பகல் அங்கிருந்து வெளியேறினார்.இன்று முற்பகல் 11.25 மணியளவில்  வைத்தியசாலையிருந்து வெளியேறிய துமிந்தவை  வரவேற்கும் பொருட்டு அவரது ஆதரவாளர்கள் சுமார் 3000 பேர் வரை அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் துமிந்தவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதுடன், பட்டாசுகளைக் கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மேலும் அவரது ஆதரவாளர்கள் வைத்தியசாலையிலிருந்து, கொள்ளுபிட்டி பித்தளை சந்திவரை கோஷமிட்டவாரு ஊர்வலமொன்றையும் நடத்தினர். அவருக்கு அணிவிக்கும் பொருட்டு மாலைகளுடன் பலர் அங்கு காத்திருந்தனர். எனினும் அனைவராலும் மாலையை அணிவிக்க முடியவில்லை.

அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கு பால் பக்கெற்றும், பனிஸும் வழங்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புடன் வெளியேறிய அவர் 11.35 மணியளவில் தனது வாகனத்தில் ஏறி அங்கிருந்து கிளம்பினார்.
வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய துமிந்த சில்வா அங்கிருந்து அலரிமாளிகைக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியிடம் ஆசி பெறும் பொருட்டு அவர் அங்குசென்றுள்ளதாக தெரிகின்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தமையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.  மேலும் பட்டாசு மற்றும் ஆதரவாளர்களின் கோஷத்தினால் அப்பகுதி மக்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய நோயாளிகளின் அன்றாட வாழ்வும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply