அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுவதால் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்: ஜனாதிபதி
அமைச்சர்களுக்கு இடையில் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தும். இதனால் அமைச்சர்களுக்கு இடையில் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும். அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை எதிர்க்கட்சிகள் பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடும். அரசாங்கத்தின் நன்மதிப்பிற்கு பாதகத்தன்மை ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply