மன்னார் ஆய­ருடன் ரணில் சந்­திப்பு

மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­ஜப்பு யோசெப் ஆண்­டகை எதி­ர்க்­க­ட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். நேற்று பிற்­பகல் மன்னார் ஆயர் இல்லத்­தில் இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது.இந்தச் சந்­திப்­பின்­போது வடக்கில் தமிழ் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்து மன்னார் ஆயர் எதி­ர்க்கட்சித் தலை­வ­ருக்கு விரி­வாக எடுத்­துக்­கூ­றி­யுள்ளார். இந்தச் சந்­திப்பில் மன்னார் மற்றும் வவு­னியா ஆகிய மாவட்­டங்­களில் காணா­மல்­போ­யுள்ள 472 பேரு­டைய விப­ரங்கள் காணா­மல்­போன உற­வு­க­ளைத் தேடும் அமைப்­பி­னரால் எதிர்க்கட்­சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.
இந்தச் சந்­திப்பில் ஐ.தே.க. செயலா­ளர் திஸ்­ஸ ­அத்­த­நா­யக்க எம்­.பி.க்­க­ளான ஜெயலத் ஜெய­வர்­தன, ரவி கரு­ணா­நா­யக்க ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.
ஆய­ரு­ட­னான சந்­திப்­புக்கு முன்னர் மன்னார் மூர் வீதி­யி­ல் ஐ.தே.க.வின் முக்­கி­யஸ்­தர்கள் மற்றும் முஸ்லிம் மதப் பிர­மு­கர்­க­ளையும் எதிர்க்­கட்சித் தலைவர் தலை­மை­யி­லான குழு­வினர் சந்­தித்து பேசினர். இந்தச் சந்­திப்பில் கொழும்பு மாந­க­ர­ச­பையின் மேயர் ஏ.ஜே.எம். முஸம்­மில், மேல்­மா­கா­ணசபை­ உறுப்­பினர் முஜிபூர் ரஹ்­மான் ஆகி­யோரும் கலந்­து­கொ­ண்டனர்.
இத­னை­டுத்து மனனார் நக­ர­சபை மண்­ட­பத்­திலும் பொதுக்­கூட்டம் இடம்­பெற்­றது. இதில் மீனவ சங்கப் பிர­தி­நி­திகள், விவ­சாய அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், மாதர் கிராம, சங்கங்­களின் பிர­தி­நி­திகள் வர்த்­த­கர்கள் என நூற்­றுக்கு மேற்­பட்­ட­வர்கள் கலந்து கொண்­டனர். இந்தக் கூட்­ட­த்தில் மன்னார் மாவட்­டத்தில் மீன­வர்கள், விவசாயிகள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யாடப்­பட்­டது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply