எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உதவி
எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியுள்ளது.எல்லைப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கைக் கடற்படையினருக்கு அமெரிக்க அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டுத் தூதரகம் அறிவித்துள்ளது. திருகோணமலை கடற்படை முகாமில் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினருக்கு அமெரிக்கா பயிற்சிகளை வழங்கி வருகின்றது.இதுவரையில் இரண்டு குழுக்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.இலங்கைக் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினருக்கு பயிற்சி வழங்குவதில் அமெரிக்கா மகிழ்ச்சி அடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார்.
கடற்படையினர், கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் ஆகியோருக்கு எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply