இத்தாலிய பிரதமர் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: இரு காவலர்கள் காயம்

இத்தாலிய பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில், இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர். இத்தாலியில் நீண்ட நாள் அரசியல் குழப்பத்துக்கு பின், பிரதமராக என்ரிகோ லெட்டா, தேர்வு செய்யப்பட்டார். நேற்று இவரது அவரது தலைமையிலான அமைச்சரவை, அதிபர் மாளிகையில் பதவி ஏற்றது. அந்த நேரத்தில், ரோம் நகரில் உள்ள, பிரதமர் அலுவலகத்தின் மீது, ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில், துணை ராணுவப் படையை சேர்ந்த, இரண்டு காவலர்கள், படுகாயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட நபரும் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலிய தேர்தலில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால், இடதுசாரி கட்சி, கன்சர்வேடிவ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இத்தாலிய பார்லிமென்ட் நிகழ்ச்சிகள் இன்று துவங்குகின்றன. பிரதமர் என்ரிகோ லெட்டா, பார்லிமென்ட்டில் நாளை மெஜாரிட்டியை நிருபிக்க உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply