இந்திய பகுதிக்குள் கூடாரத்தை அதிகரித்து வருகிறது சீன ராணுவம்
இந்திய பகுதிக்குள் ஊடுருவியுள்ள சீன ராணுவத்தினர், மேலும் ஒரு கூடாரத்தை அமைத்துள்ளனர். இதன் மூலம் லடாக்கின் கிழக்குப் பகுதியில் சீன ராணுவத்தினர் அமைத்துள்ள கூடாரங்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவிய அவர்கள், தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும் குளிரைத் தாங்கக் கூடிய நாய்களை கொண்டுவந்துள்ள சீன ராணுவத்தினர், மலைப்பகுதியில் ஆங்காங்கே பேனர்களை கட்டி வைத்துள்ளனர்.அதில், இது சீனா பகுதி என்பதை சுட்டிக்காட்டி வாசகங்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது. இரு நாடுகளிடையே எல்லைப் பிரச்னை நீடித்துவரும் நிலையில் வரும் 9ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனா செல்கிறார்.
அவரது இந்த சுற்றுப்பயணத்தின்போது, எல்லைப் பிரச்னையால் ஏற்பட்ட பதற்றத்திற்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஊடுருவல் விவகாரத்தில், மத்திய அரசு மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக பாரதிய ஜனதா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply