சர்வதேச கால்பந்து சம்மேளனம்எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க -மணிலால் பெனாண்டோ தீர்மானம்
தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகFIFA ஆ எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மணிலால் பெனாண்டோ தெரிவித்துள்ளார். கால்பந்து தொடர்பான எவ்வித நடவடிக்கைகளிலும் மணிலால் பெனாண்டோ எதிர்வரும் 8 வருடங்களுக்கு ஈடுபட முடியாது என சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதற்கு எதிராகவே மேன்முறையீடு செய்யவுள்ளதாக மணிலால் பெனாண்டோவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
2004ம் ஆண்டு சுனாமி காலத்தில் கால்பந்து வளர்ச்சி மற்றும் பேரழிவு நிவாரண நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக மணிலால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் பல சட்டதிட்டங்களை மீறி மணிலால் செயற்பட்டுள்ளார் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 8 வருட தடை விதிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply