இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக வை.கே.சிங் நியமனம்
இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக வை.கே.சிங் இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் கே. காந்தா இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனால் மிக விரைவில் அசோக் கே. காந்தா இலங்கையை விட்டு செல்லவுள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே புதிய உயர் ஸ்தானிகராக வை.கே.சிங் இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ராஜதந்திர சேவையில் சிரேஷ்ட அதிகாரியான வை.கே.சிங், தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பொறுப்பான செயலாளராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply