பொதுபல சேனா அமைப்பு-தலிபான்- காலி பேராயர் ரேய்மன்ட் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பௌத்த தலிபான்வாதம் உருவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக காலி பேராயர் ரேய்மன்ட் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்பு போன்ற சிங்கள பௌத்த அமைப்புக்களினால் சிறுபான்மை மக்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் நிறைவடைந்து சில ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வேறும் வகையிலான வன்முறைகள் சமூகத்தில் உருவாகக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் மூலம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருமளவிலான பௌத்த அமைப்புக்கள் இனவாதத்தையோ குரோத உணர்வுகளையோ தூண்டுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு சில அமைப்புக்கள் இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply