அசாத் சாலிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் : ஏ.ஐ
அசாத் சாலிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு அமைவாக அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அல்லது அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் விடுதலை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.அசாத் சாலி பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிடுவோர் தண்டிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை வாழ் சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அசாத் சாலி குரல் கொடுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய வலய பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் தெரிவித்துள்ளார்
மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் பொதுநலவாய உறுப்பு நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply