பாகிஸ்தானில் எரிவாயு ‘பைப் லைன்’ குண்டு வைத்து தகர்ப்பு: தீவிரவாதிகள் கைவரிசை

பாகிஸ்தானில் வரும் 11ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பாகிஸ்தானின் பல மாகாணங்களில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றன.இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள டேரா முராட் ஜமாலி பகுதியில் உள்ள பாட்ஃபீடர் வாய்க்கால் அருகே பதிக்கப்பட்டிருந்த எரிவாயு ‘பைப் லைன்’ தீவிரவாதிகளால் குண்டு வைத்து தகர்த்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் ராட்சத தீப்பிழம்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும், எரிவாயு செல்லும் பாதையின் பல பகுதிகளில் கசிவு ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், பலூசிஸ்தான் மாகாணத்திற்கு செல்லும் எரிவாயு வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்ற மாதமும் இதே பாதையில் பைப் லைனை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply