மாலைதீவுடனான அமெரிக்காவின் இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் சீனாவுக்கு எதிர் : சோமவன்ச

மாலைதீவுடனான அமெரிக்காவின் இராணுவ பாதுகாப்பு உடன்படிக்கையானது ஆசியக் கண்டத்திற்கே ஆபத்தானதாகும். விசேடமாக சீனாவுக்கு எதிரானதே இவ் உடன் படிக்கையாகும் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாகவே இலங்கை அரசாங்கம் உள்ளது. இதன் ஏகாதிபத்திய விரோதம் மக்களை ஏமாற்றும் நாடகமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.
மாலைதீவுடன் அமெரிக்கா செய்து கொள்ளவுள்ள இராணுவ பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் ஜே.வி.பி. யின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கையில் இந்தியாவின் வகிபாகமும் உள்ளது. அமெரிக்கா தனித்து மாலைதீவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையை செய்து கொள்ளவில்லை. தனது நண்பனான இந்தியாவின் வழிகாட்டலிலேயே இது மேற்கொள்ளப்படுகின்றது.

இலங்கைக்கு இராணுவ ரீதியான பாதிப்பை இவ் உடன்படிக்கை ஏற்படுத்தாது ஏனென்றால் ஏற்கனவே இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையை செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க விமானங்கள் எமது வான் பரப்பை பயன்படுத்த முடியும். கப்பல்கள் கடல் எல்லையை பயன்படுத்த முடியும்.

இராணுவத்தையும் தரையிறக்க முடியும். எனவே இங்கு இராணுவ ரீதியான பாதிப்பு இல்லை.

ஆனால் உள்நாட்டுப் பிரச்சினைகளில் அமெரிக்காவின் அழுத்தங்கள் ‘‘கோலோச்சும்’’ மோசமான நிலைமை உருவாகும்.

ஆசியா

இவ் உடன்படிக்கை ஆசிய கண்டத்திற்கே ஆபத்தானதாக அமையும். இந்து சமுத்திரத்தின் கடல் பயண வலயம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

சீனா

இதனால் சீனாவே அதிக பாதிப்புக்கு உள்ளாகும். விசேடமாக சீனாவை கட்டுப்படுத்தும் இந்தியாவின் தேவை நிறைவேறியுள்ளது. ஏதாவது ஒரு பிரச்சினை தூக்கும் போது சீனாவுக்கான இந்து சமுத்திரத்தின் ஊடாக எரிபொருள் கொண்டு செல்வதை அமெரிக்கா தடுக்கும் ஆபத்து உள்ளது.

இது சீனாவை பாதிக்கும்

அதேபோன்று அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளுக்கான கடல் பயணங்களை கப்பல்களை அமெரிக்கா தடுக்கும் ஆபத்தான நிலைமை தலைதூக்கும்.

ஜப்பான்

ஏற்கனவே ஜப்பானின் ஒக்கினோவோ மாகாணத்தில் 5 இலட்சம் அமெரிக்கப் படையினர் நிலை கொண்டுள்ளனர். அதேபோன்று தென்கொரியா, குவாங் தீப கற்பத்திலும் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளன. இவ்வாறு ஆசியாக் கண்டத்தை சுற்றி தனது படைகளை குவிக்கும் அமெரிக்காவின் திட்டத்தின் வியாபிப்பே மாலைதீவுடனான பாதுகாப்பு உடன்படிக்கையாகுமென்றும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply