வட மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களைத் தெரிவு செய்தால்கிளிநொச்சியில் சிறந்தஅறிவியல்கல்வி :அமைச்சர் டக்ளஸ்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கட்டிப்பாகப் போட்டியிடும். ஆனால் இதில் கூட்டாகவோ அல்லது தனியாகவோ நின்று போட்டியிடுவதென இன்னமும் முடிவு செய்யவில்லை. யார் முதலமைச்சராகப் போட்டியிடுவது என்பது தொடர்பிலும் இன்னமும் முடிவு காணப்படவில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.குருநகர் சீனோர் தொழிற்சாலையில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவருக்கான பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பலரும் பல கருக்களை வெளியிட்டு வருகின்றனர். அவை அரச தரப்பில் இருந்தும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் வந்த வண்ணம் உள்ளன.
அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக் ஷ வடமாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் ஈ.பி.டி.பியுடன் இணைந்து போட்டியிடும் எனக் கூறியிருந்தார். இவ்வாறு அவர் கூறியது எந்த அர்த்தம் என்பது எமக்குப் புரியவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன்தான் தான் ஈ.பி.டி.பியும் உள்ளது. கடந்த கால தேர்தல்களில் அவர்களுடன் இணைந்து தான் நாங்கள் போட்டியிட்டுள்ளோம். எனினும் அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பாக எமக்கு எந்த விளக்கமோ அல்லது அறிவித்தல்களோ முன்கூட்டியே தரப்படவில்லை.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியான ஆணை கொடுத்தால் ஜனாதிபதியின் ஆசியுடன் பலாலியில் மக்களைக் குடியேற்ற முடியும். கிளிநொச்சியில் அறிவியல் நகருக்கு நடக்க இருந்த விடயம் யாவரும் அறிந்தது. ஆனால் அதனை நாம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அறிவியல் நகரை மீளவும் பெற்ற சிறந்த கல்வி நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தியுள்ளோம்.
இணக்க அரசியல் என்பதே எமது நோக்கமாக இருந்தமையால் இந்தப் பிரச்சினைக்கு கலந்து பேசித் தீர்வு காணமுடிந்தது. இது போல் இங்குள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கு இரு தரப்பிலும் கலந்து பேசித் தீர்வு காண முடியும். எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து செல்வதால் எந்தப் பயனும் இல்லை. இது இருப்பதையும் இல்லாமல் செய்துவிடும். மக்களுடைய நிலம் மக்களுக்கு கிடைக்கவேண்டும் தற்போதைய காணி அபகரிப்பு விடயத்தையும் சரியான அணுகு முறையாக பயன்படுத்த வேண்டும். அதன்மூலமே இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதனை இணக்க அரசியல் மூலமே செய்ய முடியும். மக்கள் சரியானவர்களுக்கு சரியாக ஆணையை வழங்கினால் நடைமுறை சாத்தியமான விடயங்களை செய்ய முடியும். ஜனநாயக சூழலில் யாரும் எந்தக் கருத்தையும் கூறலாம். ஆனால் நியாயம் நடைமுறை சாத்தியம் என்ற விடயம் உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டிப்போவதாகக் எனக்கூறுகிறது. இது நாளை மாறலாம். அதில் இருந்து பின்வாங்கலாம். இதேபோன்றே இன்று கூறப்படுகின்ற கருத்துக்களும் நாளை சரியாக நடைபெறும் எனக் கூறமுடியாது
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply