இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவத்தினர் உதவி?
ஜம்மு காஷ்மீர் அருகே எல்லைக் கோட்டில் இந்தியா – பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. சம்பா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த துப்பாக்கிச் சண்டையால் இரு நாட்டு எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இந்திய எல்லைக்குள் சிலர் ஊடுருவ முயன்றதை அடுத்து, அவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் எச்சரித்து உள்ளனர். எனினும் அவர்கள் எல்லைக்குள் அத்துமீறி முயற்சி செய்த போது, எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை எச்சரித்தனர். ஆனால் மறுமுனையில் ஊடுருவலுக்கு உதவியாக பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுக்க இரு தரப்புக்கும் இடையே 30 நிமிடத்திற்கும் மேலாக கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த மாதத்தில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கூடாரம் அமைத்தது. தற்போது பாகிஸ்தான் ராணுவமும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply