அசாத் சாலி கைது செய்யப்பட்டமைக்கு ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கண்டனம்
தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயருமான அசாத் சாலி கைதுசெய்யப்பட்டமைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், இது ஓர் ஆபத்தான நிலைமை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இது தனிமனித சுதந்திரத்திற்கும் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கும் முரணான ஒரு விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்படும் ஒருவருக்கு அரசியல் அமைப்பிற்கு அமைய அதற்கான காரணம் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் நாட்டின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply