பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தல்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டான்.இன்று காலை முல்தான் நகரத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஹைதரை, துப்பாக்கி ஏந்திய சிலர் கடத்திச் சென்றனர்.அப்போது அதை தடுக்க முயன்ற அவரது பாதுகாவலர் மற்றும் செயலாளரையும் கடத்தல்காரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். கடத்தலுக்கான காரணமும், கடத்திய அமைப்பைப் பற்றிய விவரமோ இதுவரை தெரியவரவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply