ஒபாமா – தென்கொரியா அதிபர் சந்திப்பு : வடகொரியா கண்டனம்
இந்நிலையில், தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் ஜியூன் ஹை கடந்த 6 ம் தேதி முதல் நேற்று வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அதிபர் ஒபாமாவை சந்தித்தார். சந்திப்பின் போது ஒபாமா ‘வடகொரியா போர் அச்சுறுத்தல்களால் எதையும் சாதிக்கவில்லை. அது தோல்வி அடைந்து விட்டது. ‘ என்று கடுமையாக சாடியிருந்தார். புதன் கிழமை அன்று தென்கொரிய அதிபர் பார்க் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினர்.
இந்த சந்திப்பு குறித்து வடகொரியா கருத்து தெரிவித்துள்ளது. அதில் ‘தென்கொரிய அதிபர் பார்கின் அமெரிக்கப் பயணம் ஒரு இன்பச்சுற்றுலா. இது எஜமானரை மகிழ்விக்க துதிபாடச் சென்ற ஒரு கேவலமான பயணம். மேலும் வடகொரியாவுக்கு எதிரான தங்கள் உறவை பலப்படுத்திக்கொள்ளவும் இது மேற்கொள்ளப்பட்டது.
பார்க்கின் கர்வமான பேச்சு கொரிய நாடுகளுக்கு இடையே உள்ள பதற்றத்தை அதிகரிக்கும். அவர்களின் சந்திப்பு, வடகொரியா மீது தாக்குதல் நடைபெறப் போகிறது என்பதற்கு ஒரு அறிகுறி.’ என்று கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply