இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பில் அதிமுக, திமுக பேசுவது வேடிக்கை!

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மதுரை மேலமாசி வீதி- தெற்கு மாசி வீதி சந்திப்பில் நடந்தது. பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-
தமிழ் ஈழம் என்று தமிழகத்தில் பேசும் சிலர் இலங்கை தமிழர்களுக்காக செய்தது என்ன?

மத்திய அரசு ரூ.48 ஆயிரம் கோடி மதிப்புள்ள நல உதவிகளை இலங்கை தமிழர்களுக்கு செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள வைகோ, சீமான் போன்றவர்கள் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கு கூட எந்த நன்மையும் செய்யாதவர்கள்.

ஆனால் இங்கே பேசி, பேசி இலங்கையில் உள்ள தமிழர்களை வேதனைப்படுத்தி வருகிறார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சனைகள் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply