ஜயலத் ஜயவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று (02) மாலை இடம்பெறவுள்ளது.  ஜா-எல, வெலிகம்பிட்டிய றோமன் கத்தோலிக்க மயானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவரது பூதவுடல் ஜா-எல, வெலிகம்பிட்டியவிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள் அவரது உடலிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அண்மையில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூரிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது கடந்த மாதம் 30ஆம் திகதி காலமானார்.

1959ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் ஜயலத் ஜயவர்தன தனது 59வது வயதில் காலமானார்.

டாக்டர் ஜயலத் ஜயவர்தன 1994ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்.

2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இவர் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக பணிபுரிந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply