பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகள் மட்டுமே கற்பிக்கலாம்! தமிழக அரசு புதிய உத்தரவு

பெண்கள் பள்ளிகளில் செக்ஸ் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மே 28-ந் திகதி தமிழக அரசாணை 145-ல் புதிதாக பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியைகளும் பெண்களாகவே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவையே பின்பற்றி அரசு ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசின் இந்த உத்தரவு சமீபத்தில் நடந்த கவுன்சிலிங்கின்போது கடைசி நாளில் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு அடுத்த கவுன்சிலிங்கின்போதும் அமுல்படுத்தப்படும். மேலும் பதவி உயர்வு, புதிய ஆசிரியர்கள் நியமனம், டிரான்ஸ்பர் ஆகியவற்றில் இந்த உத்தரவு பின்பற்றப்படும் என்றார்.

அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் தரப்பில் சிலர் எதிர்ப்பும், வரவேற்பு உள்ளது. பள்ளிகளில் செக்ஸ் புகார்களை தடுக்கும் வகையில் அரசின் இந்த உத்தரவு வரவேற்க கூடியது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply