13ம் திருத்தச் சட்டத்தின் சரத்துக்களை ரத்து செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு

அதிகாரப் பகிர்வினை பலவீனப்படுத்தும் முனைப்புக்களுக்கு எதிர்ப்பை வெளியிட நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தின் சரத்துக்களை ரத்து செய்ய மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. கட்சியின் அதி உயர் பீடம் கூடி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,
அதிகாரப் பகிர்வினை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது என கட்சியின் தேசிய அமைப்பாளர் ரபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார். 18ம் திருத்தச் சட்டமொன்றை அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலத்தினால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply