இலங்கை கடற்பரப்பில் இந்திய படகு கரை ஒதுங்கியுள்ளது

இந்தியாவின் பாம்பன் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற நாட்டு படகு மீனவர்கள் 7 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அவர்கள் பயணித்த படகு இலங்கை கடலில் கரை ஒதுங்கியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து கடந்த 2ம் திகதி காலை, மீனவர் தேவசகாயத்துக்கு சொந்தமான படகில் மீனவர்கள் அகஸ்டின் (45), முருகன் (35), முனியசாமி (55), செல்வம் (55), பூரணம் (55), நல்லதம்பி (42), மற்றொரு முனியசாமி (42) ஆகியோர் சென்றனர்.

அன்று மாலை கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டனர். நேற்று (03) அதிகாலை கரை திரும்ப வேண்டிய 7 மீனவர்களும் பாம்பனை சென்றடையவில்லை.

கடந்த சில நாட்களாக கடலில் பலத்த காற்று வீசும் நிலையில், தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவர் குடும்பத்தினர், அவர்களது உறவினர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்தில் படகு உரிமையாளர் தேவசகாயம் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

மீன்துறை அனுமதியின் பேரில் பாம்பனை சேர்ந்த தேவசகாயம், ஜெரோமியான், ஜான் பிரிட்டோ ஆகியோரது படகுகளில் ஜேசுராஜ், ஆறுமுகம், சந்தியாகு, பால்ராஜ், குமார், செல்வம் உள்பட 21 மீனவர்கள், மாயமானவர்களை தேடி ராமேஸ்வரம் ஓலைக்குடா சங்குமால் கடற்கரையில் இருந்து இன்று காலை புறப்பட்டு சென்றனர். இந்திய கடலோர பொலிஸ், கடற்படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, மீன்பிடியின் போது பழுதான தேவசகாயத்தின் நாட்டு படகு இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் மீனவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply