250 புலிகள் இராணுவத்தினரிடம் சரண் : மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க

வடக்கில் விடுதலைப் புலிகளுக்கெதிரான அண்மைக் கால நடவடிக்கைகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராணுவப் பேச்சாளரான உதய நாணயக்கார தகவல் தருகையில் இராணுவத்தினரிடம் சரணடைந்த புலி உறுப்பினர்களில் இருபது பேர் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது புனர்வாழ்வுக்குத் தேவையான நலநோம்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்.

இவ்வாறு படையினரிடம் சரணடைந்த இளைஞர்களும் யுவதிகளும் தாம் நீண்டகாலமாகப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களென்பதனை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply