வடக்கு தேர்தலே இலங்கையின் முன்னேற்றத்தை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும்!
வட மாகாண சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதன் ஊடாகவே இலங்கையின் முன்னேற்றத் தன்மையினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த முடியும். அதே போன்று வட மாகாண சபை தேர்தல் விவகாரம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாட்டை பாதிக்காது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்ட விடயம். பிரிட்டன் பிரதமர் உட்பட பொதுநலவாய உறுப்பு நாடுகளின் அனைத்துத் தலைவர்களும் இலங்கையில் நடைபெறுகின்ற மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர். எனவே, மிகவும் வெற்றிகரமான பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெல்லன்வில விகாரைக்கு மியன்மார் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட யானைக்குட்டியொன்றினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை விகாரை வளகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply