இலங்கையின் சாதனைகள் தொடர்பில் கிறிஸ் நோனிஸ் விளக்கம்

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கம், மீள ஒன்றிணைதல், மீள்கட்டுமானம் தொடர்பான இலங்கையின் சாதனைகள் தொடர்பில் ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகள் டாக்டர் கிறிஸ் நோனிஸ், பிபிஸியின் வேர்ல்ட் டுடே நிகழ்ச்சியின் போது விளக்கமளித்துள்ளார்.  26 வருட யுத்தம் முடிவுற்றதன் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்ட 297,000 மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வரலாற்றில் ஆகவும் கூடிய பணயக் கைதிகள் மீட்கப்பட்ட நடவடிக்கை இலங்கையிலேயே இடம்பெற்றுள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், 11,600 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply