கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி:எம்.ரி. ஹசன் அலி

மேல் மாகாண சபைத் தேர்;தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம்; காங்கிரஸ் களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி  தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் தனித்தா அல்லது கூட்டாகவா போட்டியிடுவதென்பது குறித்த தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக் காரியாலயமான தாருஸ் ஸலாமில் இன்று மாலை நடைபெறவுள்ள கொழும்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே தனித்தா அல்லது கூட்டாகவா என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply