13! பொலிஸ், காணி அதிகாரங்கள் செப்டெம்பருக்குள் திருத்தப்படும்

13 ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களில் செப்டெம்பர் மாதத்திற்குள் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். உயர் நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களித்தின் ஆலோசனைகளைப் பெற்றே இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தலைமையில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது  13 ஆவது திருத்தமும் வடக்குத் தேர்தல் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

13 ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி   அதிகாரங்களில் திருத்தங்களை  செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் உயர்  நீதிமன்றம் மற்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை பெற்று திருத்துவதற்கான ஏற்பாடுகளை  ஜனாதிபதி  மேற்கொண்டுள்ளார்.

மேற்படி விடயம் சம்பந்ததமாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கொண்ட  கூட்டத்தினை மீள ஆரம்பித்து இவ் விடயம் சம்பந்தமாக மேலும் ஆராயப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வராவிட்டாலும் மேற்படி விடயங்கள் ஏனைய கட்சிகளுடன்  ஆராயப்படும்.

எமது கட்சி, மே தினத்திலிருந்து பொலிஸ், மற்றும் காணி  அதிகாரம் இல்லாது வடக்கில் தேர்தல் நடாத்தவேண்டும் என நாடளாவிய ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது.  அத்துடன் 10 இலட்சம்பேரது கையெழுத்து வேட்டை நாடு பூராவும் பெறப்பட்டு வருகின்றது. எதிர்லரும் 12ஆம் திகதி கொழும்பில் வைத்து இக் கையொழுத்து வேட்டைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அரச கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்  இவ்விடயம் சம்பந்தமாக ஏனைய கட்சிகள்   எதிர்ப்புப் தெரிவிக்கப்பட்டதா? என ஊடகவியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தான் சுகயீனமாக உள்ளதாக முன்கூட்டியே சென்று விட்டார். அமைச்சர் டக்லஸ் தேவானந்தா  கருத்து தெரவித்தபோதும் அவர் அனைத்துக் கட்சி கூட்டுவதை ஆதரித்துப் பேசினார். ஏனைய கட்சிகள் எதுவும் இவ் விடயத்திற்கு எதிராக பேசவில்லை என்றார்.

ஆகக் குறைந்தது 13வது திருத்தத்தில்  திருத்தம் கொண்டுவரும் அளவுக்கு ஐனாதிபதியும் அரசும் இறங்கியுள்ளதையிட்டு நாம் வெற்றிகண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இருந்தும் பேராசிரியரும் அமைச்சருமான ஜி.எல். பீரிஸ் 17 ஆம் மற்றும்  18 ஆம் திருத்தங்கள் ஊடாக பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளமையால்  13 ஆவது திருத்தத்தை திருத்த வேண்டிய அவசியமில்லை தெரிவித்த உடனே எனது எதிர்ப்பை தெரிவித்தேன். அதன் பின்பே ஜனாதிபதி  மேற்படி திருத்தத்தை உயர் நீதிமன்றத்தின் ஊடாக திருத்துவதற்கு இணங்கியதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply