சந்திரிகாவின் மூளை எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதுங்கவின் வலது கண் முழுமையாக செயலிழந்திருந்த போதிலும் அவருடைய மூளை எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்று கண் வைத்திய நிபுணர் சரித் பொன்சேகா சாட்சியமளித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது கொழும்பு மாநகசபை மண்டப வளாகத்தில் 1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

மேல் நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவாசம் முன்னிலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கில் ரகுபதி சர்மா, வேலாயுதன் உதயராசா மற்றும் சந்திரா சர்மா ஆகியோர் மீதே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த மூவருக்கும் எதிராக 190 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில்  கண் வைத்திய நிபுணராக கடமையாற்றிய சரித் பொன்சேகா சாட்சியமளித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதுங்கவின் வலது கண்ணில் காயமொன்றை நான் அன்று சோதித்தேன். அந்த காயம் காரணமாக அவரது வலது கண் முழுமையாக செயலிழந்திருந்தது.

வலது கண் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் அவருடைய மூளை எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜி.ஜெயக்குமார், சாட்சியமளித்த கண் வைத்திய நிபுணரின் சாட்சியத்தை நான் குறுக்கு விசாரணை செய்யவிரும்பவில்லை என்று நீதிமன்றுக்கு தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை யூன் மாதம் 19 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

1999 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்காக கொழும்பு மாநகர சபைத்திடலில் டிசெம்பர் 18 ஆம் திகதி நடைபெற்ற இறுதி பிரசாரக்கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உட்பட 110 பேர் காயமடைந்ததுடன் 31 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply