அதிகாரத்தை மாவட்ட மட்டங்களில் பகிரவேண்டும் – தினேஷ் குணவர்தன

மக்கள் ஐக்கிய முன்னணி, மாகாண சபை முறைமைக்கு அன்றிலிருந்தே எதிர்ப்பு தெரிவிப்பதனால் அதிகாரத்தை மாவட்ட மட்டங்களில் பகிரவேண்டும் என்று முன்னணி தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. தலவத்துகொடையிலுள்ள கட்சி தலைமையகத்தில அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் முன்னணியின், நாடாளுமன்ற, மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களைச்சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட மட்டத்தில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதன் ஊடாக ஒவ்வொரு இனத்திற்கும், மதத்திற்கும் இன மற்றும் மொழி அடையாளத்தை பாதுகாக்கமுடியும் என்பதுடன் அபிவிருத்தியையும் இலகுவாக முன்னெடுக்கமுடியும் என்றும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply