மிகச் சிறந்த நட்பு நாடு இலங்கை – சீனா புகழாரம்
மிகச் சிறந்த நட்பு நாடாக இலங்கை திகழ்கின்றது என சீனா புகழாரம் சூட்டியுள்ளது. பல ஆண்டுகளாக இலங்கை சீனாவின் நட்பு நாடாக திகழ்வதாக அந்நாட்டு துணைப் பிரதமர் மா காய் தெரிவித்துள்ளார். சீனாவில் நடைபெற்று வரும் வர்த்தகக் கண்காட்சியொன்றில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரட்னவிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி, சீன ஜனாதிபதியுடன் முக்கிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த இணக்கப்பாடுகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு சீனா வழங்கி வரும் சகல உதவிகளும் பாராட்டுக்குரியது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply