பிரான்ஸில் பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை; புலி இயக்க முகவர்கள் நால்வர் கைது

பிரான்ஸில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புலி இயக்க முகவர்களைக் கைது செய்ய முயற்சித்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நேற்று (பெப். 22) இரவு பிரான்ஸின் லாகுருண என்ற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பிரான்ஸின் லாகுருண பிரதேசத்தில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், நிதி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோரைக் கைது செய்ய முயற்சித்த போது அவரிடமிருந்த கைத்துப்பாக்கியைப் பறித்து அவரை சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறது.

இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்களென அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply