அரசாங்கம் குறித்து பொதுநலவாயத்திடம் முறையிடுவோம் – மங்கள சமரவீர எச்சரிக்கை
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முதல் அரசாங்கம் பொலிஸ், தேர்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும் அவ்வாறில்லாவிட்டால் பொதுநலவாயத்திடம் நாம் முறையிடுவோம் என ஐக்கிய தேசிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரித்தார். இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபைத்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பரில் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்த நிலையில், அங்கு சுயாதீனமான தேர்தல் ஒன்று இடம்பெற வேண்டுமானால் அரசாங்கம் பொலிஸ், தேர்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவவேண்டும்.
குறித்த தேர்தலை வடக்கு மக்கள் மாத்திரம் அல்ல அனைத்து மக்களும் எதிர்பார்த்துள்ளனர். வடக்கு மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் தேர்தலை மேற்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் குளறுபடிகள் இடம்பெற்றால் எமது நாட்டுக்குத்தான் அவப்பெயர் உண்டாகும்.
இந் நிலையில் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை இதில் ஈடுபடுத்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். வடக்கில் சிவில் நிர்வாகத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அங்கு ஆளுநர் ஒருவர் சிவில் பிரஜையாக நியமிக்கப்பட வேண்டும்.
இவற்றைத்தான் சர்வதேசத்திற்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது விட்டால் நாம் எதிர்வரும் நவம்பரில் இலங்கையில் இடம்பெறவுள்ள பொது நலவாய மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் பிரதிநிதிகளிடம் தெளிவாக வலியுறுத்தவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply