நீதி, சமாதானத்தை நிலைநாட்ட அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துள்ளது

பயங்கரவாதத்தை தோற்கடித்து நாடு சட்டத்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் நீதியையும் சமாதானத்தையும் பலப்படுத்த அரசாங்கம் தம்மை அர்ப்பணித்துள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டத்தின் முன்னிலையில் சகலரும் சமம் என தெரிவித்த அவர் கே.பி.க்கு எதிராக குற்றச்சாட்டு இருந்தால் அதனைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் பாரிய குற்றவாளிகளுக்கும் ஐ. தே. க. மன்னிப்பு வழங்கியது என தெரிவித்த அமைச்சர்

தாய்நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினருக்குக்கூட அரசாங்கம் மன்னிப்பு வழங்கியதாகவும் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சி ஏகாதிபத்திய ஆட்சியல்ல எனவும் ஜனநாயக ரீதியிலான ஆட்சியே தற்போது இடம்பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐ.தே.க. 25 தடவைகள் தோற்கடிக்கப்பட்டதால் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றாகிவிடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐ.தேக. எம்.பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply