சீரற்ற காலநிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பாகங்களிலும் இன்று அதிகாலை தொடக்கம் விடிய விடிய கடும் காற்று வீசியது. கொழும்பில் அதிகாலை வீசிய கடும் காற்றால் ஆங்காங்கே வீதிகளில் மரங்கள், மரக்கிளைகள், விளம்பர பலகைகள் முறிந்து வீழ்ந்து கிடப்படை அவதானிக்க முடிகிறது. அத்துடன் பல வீதிகளில் மரங்களில் இலைகள் விழுந்து வீதியெங்கும் இலைமயமாய் காட்சி அளிக்கிறது. இந்த காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மன்னார், பொத்துவில், காலி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply