எதிர்க்கட்சிகளுக்கு நிமால் சிறிபாலடி சில்வா எச்சரிக்கை

உறுப்பினர்களை தெரிவு செய்யாமல் எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவை அலட்சியப்படுத்துமாயின் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று சபைமுதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.  அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குவுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களை தெரிவுசெய்து அறிவிக்குமாறு, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் தரப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 19 உறுப்பினர்களின் பெயர்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 12 இடங்களுக்கு எவரையும் இதுவரையிலும் நியமிக்கவில்லை என்றால், பெரும்பான்மை உள்ள அரச உறுப்பினர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க சபாநாயகரிடமிருந்து தங்களுக்கு எந்தவொரு அழைப்பும் இதுவரை வரவில்லை என்றார்.

தாங்கள் தெரிவுக்குழுவில் பங்கேற்பதென்றால், வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை செப்டெம்பரில் நடத்தவேண்டும், அந்த தேர்தலை கண்காணிப்பதற்காக பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை அனுமதிக்கவேண்டும். தேர்தலுக்கு முன்னர் சிவில் சமூகத்திலிருந்து ஆளூநராக ஒருவரை வடக்கிற்கு நியமிக்கவேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் சம்மதித்தால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நாம் பங்கேற்போம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply