வடக்கில் தமி­ழர்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­ற­ன – பாஜக

வடக்கில் தமி­ழர்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­ற­மையை நாம் ஊர்­ஜி­ப்படுத்திக் கொண்­டுள்ளோம். இவ்­வி­டயம் தொடர்பில் மத்­திய அரசை தெளி­வு­ப­டுத்­து­வ­துடன் எதிர்க்­கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் உள்­ளிட்­டோ­ரிடம் எடுத்­து­ரைப்போம் என இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள பார­தீய ஜனதாக் கட்­சியின் பேச்­சா­ளரும் பிரதி தலை­வ­ரு­மான ரவி­சங்கர் பிரசாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இது தொடர்பில் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் கூறு­கையில்,

இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள பார­தீய ஜனதாக் கட்­சியின் பிரதித் தலைவர் ரவி­சங்கர் பிரசாத் தலை­மை­யி­லான குழு­வி­னரை நேற்று முன்­தினம் மாலை சந்­தித்தோம். வடக்கில் தமி­ழர்­களின் காணி அப­க­ரிக்­கப்­படல் மற்றும் அர­சி­யல் தீர்வில் காணப்­படும் நெருக்­க­டிகள் உட்­பட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் பேசினோம்.

அவற்றை ஏற்­றுக்­கொண்ட இந்­திய தூதுக்­குழு யாழ்ப்­பா­ணத்தில் கேட்­ட­றிந்து கொண்ட விட­யங்­களும் கூட்­ட­மைப்பின் கருத்­து­களும் ஒன்­று­ப­டு­வ­தா­கவே உள்­ளது. குறிப்­பாக வடக்கில் காணி அப­க­ரிப்பு தொடர்பில் ஊர்ஜிதம் செய்து கொண்டுள்ளோம் என்றும் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். இவற்றை இந்தியாவில் எடுத்துரைப்போம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply