அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கார் மீது கல்வீச்சு
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் கலவரம் ஒன்றில் அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கார் மீது கல்வீசித் தாக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் காயமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து போலிஸார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சில் 20 பேர் காயமடைந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று சென்னையிலிருந்து விமானத்தில் மதுரை வந்தார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் வந்த அவர் பசும்பொன் ஹெலிகாப்டர் தளத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு இறங்கினார். அங்கிருந்து காரில் தேவர் நினைவிடம் வந்தபோது முக்கிய பிரமுகர்கள் நுழையும் வாயிலை நெருங்கியதும் சரமாரியாக கற்கள் அவரது காரை நோக்கி வீசப்பட்டன.
இதில் ஜெயலலிதா காரின் முன்பக்க , பின்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அதேபோன்று பாதுகாப்பு படை பொலிஸார் கார்களின் கண்ணாடிகளும் நொறுங்கின. கல்வீச்சில் பொலிஸாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளாக தன் மிரட்டல்களை சந்தித்து வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் , இதுபோன்ற மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஜெயலலிதா ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply