விசுவமடுவில் புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கு பாதுகாப்பு படையினரால் மீட்பு

முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.படையினரால் விடுவிக்கப்பட்ட விசுவமடுவின் பல்வேறு பிரதேசங்களில் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் நடத்திய பாரிய தேடுதல்களின்போதே இந்த ஆயுதக் கிடங்கை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 81 மி.மீ. ரக 250 மோட்டார்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

52 பீப்பாய் எரிபொருள்கள், 150 பெட்டிகளைக் கொண்ட இரும்புக் குண்டுகள், 35 ஆயிரம் வெடிபொருட்கள் என்பனவற்றையும் படையினர் அங்கிருந்து கண்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, சீ௪ ரக அதி சக்திவாய்ந்த வெடிமருந்து 10 கிலோ, ரி.என்.ரி. ரக அதி சக்திவாய்ந்த வெடிமருந்து 238 கிலோ, குண்டுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபகரணங்கள் 1000, இரண்டு ஸ்டேன்ட்களைக் கொண்ட கிளேமோர் குண்டுகள் 250, மூன்று ஸ்டேன்ட்களைக் கொண்ட கிளேமோர் குண்டுகள் 71, 81 மி.மீ. ரக மோட்டார் குண்டுகள் 200, கைக்குண்டுகள் 12, கிளேமோர் குண்டுகள் 33, அமுக்க வெடிகள் 30, பெற்றோல் குண்டுகள் 20, அருள் ரக குண்டுகள் 5, 60 மி.மீ ரக மோட்டார் குண்டுகள் 10, 5.5 கிலோ எடையுள்ள நிலக்கண்ணிவெடி 1, 2.5 கிலோ எடையுள்ள நிலக் கண்ணிவெடி 1, ட்ரக் 1, லொறி 1 மற்றும் உபகரணங்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் இந்தப் பிரதேசங்களில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply