சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து யுத்த நிறுத்தம் செய்வதற்கு இலங்கை காலனித்துவ நாடல்ல : பிரதமர் ரத்னசிறி

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குச் செல்லுமாறு பல நாடுகள் அரசாங்கத்தகை; கேட்டுள்ளனவென்பதனை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்தமொன்றுக்குத் தயாராகவில்லையென்பதனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தான் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க இன்று  தெரிவித்துள்ளார்.

இன்று இடமபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையை ஒரு காலனித்துவ நாடாக நினைத்துச் சில நாடுகள் யுத்த நிறுத்தத்துக்கு எம்மை நிர்ப்பந்திக்கின்றன.
இலங்கையானது சுதந்திரமான ஜனநாயக நாடு. எங்களது மக்கள் கூறுவதனை மட்டுமே நாங்கள் கேட்போம்.

யுத்த நிறுத்தமொன்றுக்கு சர்வதேசம் எம்மைக் கேடபதற்கிணங்க நாங்கள் செயற்படத் தயாரில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply