சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31வது மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி கலந்துகொள்ளமாட்டார்
கொழும்பில் நடைபெறவிருந்த சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31வது மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி கலந்துகொள்ளமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகிறது. இதில் கலந்துகொள்வதற்காகக இந்திய வெளிவிவகார அமைச்சரும், தற்காலிகமாகப் பிரதமரின் பதவிகளை வகித்து வருபவருமான பிரணாப் முஹர்ஜி இலங்கைக்கு வருவார் என முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சூழ்நிலை காரணமாக முஹர்ஜி கொழும்பு வரமாட்டார் எனவும், வெளிவிவகார அமைச்சின் பதில் அமைச்சர் ஈ.அஹமட் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் எஎனவும் தெரியவருகிறது.
எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவிருக்கும் சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் பயங்கரவாதம், பொருளாதாரம் மற்றும் நிதி ஒத்துழைப்புக் குறித்தும் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சார்க் மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும்; முக்கிய அமர்வாகவும் இது அமைந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply