தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் ஆயுதங்கள் முற்றாகக் களையப்படும் : ஆசாத் மௌலானா
வடக்கில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டிருப்பதால் தமது உறுப்பினர்களுக்குக் காணப்பட்ட அச்சுறுத்தல் குறைந்திருப்பதால், ஆயுதங்கள் களையப்படவிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஆசாத் மௌலானா கூறினார்.
“விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் பயங்கரவதாம் கூடுதலானளவு ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே, எமக்கு இனிமேல் ஆயுதங்கள் தேவையில்லை. ஜனநாயக ரீதியான கட்சியென்ற ரீதியில் எமது உறுப்பினர்களின் ஆயுதங்கள் விரைவில் களையப்படும்” என்றார் ஆசாத் மௌலானா.
தமது உறுப்பினர்களின் ஆயுதங்கள் களையப்பட்டு, அச்சுறுத்தல் இருக்கும் உறுப்பினர்களுக்குப் பாதுகாப்புத் தரப்பினரின் பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ் மக்கள் விடுதலைப் பலிகளின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் கூறியிருந்தார்.
இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரும், முன்னாள் த.ம.வி.பு.களின் முன்னாள் தளபதி கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தியுடன் சேர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளவில்லையென ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
“தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாண மக்களுக்காகக் குரல்கொடுக்கும் அரசியல் கட்சி. நாம் எமக்கு வழங்கப்பட்ட ஆணையைக் கைவிட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளப்போவதில்லை. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பங்காளிக் கட்சியென்ற ரீதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சிறந்ததொரு உறவைப் பேணுவோம்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply