புலிகளின் 130 மி. மீ. பீரங்கி படையினரால் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது

புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்திலிருந்து படையினரால் மீட்டெடுக்கப்பட்ட புலிகளின் 130 மி. மீ. ரக கனரக பீரங்கிகள் இரண்டும் இராணுவத்தினரால் நேற்று பொருத்தப்பட்டு பரிசோதித்து பார்க்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் பொறியியல் பிரிவும், பீரங்கி பிரிவும் இணைந்து மேற்கொண்ட இந்த பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சுமார் 27 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய இந்த 130 மி. மீ. ரக கனரக பீரங்கிகள் இரண்டும் புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்திலிருந்து படையினரால் அண்மையில் மீட்டெடுக்கப்பட்டன.

மிகவும் பாதுகாப்பாகவும், சூட்சுமமான முறையிலும் பொலித்தீன்களால் சுற்றப்பட்டு, நிலத்திற்கு கீழ் 10 அடி ஆழத்தில் கிறீஸ் பூசப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்த இரு பீரங்கிகளையும் படையினர் அண்மையில் மீட்டெடுத்தனர்.

இந்த நிகழ்வில் இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணரட்ன, இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹண பண்டார, பிரிகேடியர் சாகி கல்லகே மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply