சுடர்ஒளி பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்படவில்லை : பேச்சாளர் ரஞ்சித் குணசேகர (பிந்திய செய்தி)
சுடர்ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கடத்திச் செல்லப்படவில்லையென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். வித்தியாதரன் விசாரணைக்காகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறினார்.
சுடர்ஒளி பத்திரிகையில் பணியாற்றும் ஒருவரின் உறவினருடைய மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக கல்கிசையிலுள்ள மலர்ச்சாலையொன்றுக்குச் சென்றிருந்த சமயம் இன்று (பெப். 26) வியாழக்கிழமை காலை 9.40 மணியளவில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற புலிகளின் தற்கொலை வான் தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் உள்ளதாகவே இவர் கைதாகியுள்ளதாக ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply