சிறுவர்களை புலிகளிடமிருந்து காப்பதில் அரசு முனைப்புடன் செயற்படுகிறது:ஜனாதிபதி
நாட்டைப் பயங்கரவாதத்தி லிருந்து மீட்பது, சிறுவர்களைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பது ஆகிய இரண்டு நடவடிக்கைகளையும் அரசாங்கம் இணைந்த செயற்பாடாக ஒரே சமயத்தில் மேற்கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.இச் செயற்பாடுகளுக்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சிறுவர்களைப் படையில் சேர்த்துக் கொள்வதற்கு எதிரான தேசிய இயக்கமொன்று நேற்றுக் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இச் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
சிறுவர்கள் படையில் சேர்த்துக் கொள்ளப் படுவதைத் தடுப்பதற்கும். ஏற்கனவே சேர்த்துக் கொள்ளப்பட்ட சிறுவர்களை விடுவிப்பதற்குமான ஒரு தேசிய இயக்கமாக இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நேற்றைய இவ் அங்கு ரார்ப்பண நிகழ்வில் அமை ச்சர்களான மஹிந்த சமரசிங்க, டக்ளஸ் தேவானந்தா, எம். எச். மொகமட், ஏ. எச். எம். பெளஸி, ராஜித சேனாரத்ன, ஜீ. எல். பீரிஸ் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயக மூர்த்தி முரளிதரன் எம். பி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் தேசிய சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
சிறுவர்களைப் படையில் சேர்க்கும் குரூர செயற் திட்டத்திற்குள்ளாகியுள்ள நாடுகளில் நாமும் உள்ளோம் என்பதையிட்டு எமது நாடும் இனமும் பெரும் அகெளரவத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த அகெளரவத்தை துடைந்து விடுவதற்கான காலம் தற்போது உருவாகியுள்ளது என நான் நம்புகிறேன்.
இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இச் செயற்திட்டம் எப்போதோ ஆரம்பித்திருக்கப்பட வேண்டியதொன்று. எனினும் காலங்கடந்தாவது இதனைச் செய்துள்ளோம். இது எமது எதிர்கால பரம்பரையான சிறுவர்களுக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பணியாகிறது. அவர்களுக்காக எத்தனைய தியாகத்தையும் செய்ய நாம் எந்நேரத்திலும் தயாராயிருக்க வேண்டும்.
எமது அரசாங்கத்துக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒரு இயக்கத்தினால் இன்று சிறுவர்கள் படைக்கு எதிராக நாம் எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டிய நிலை தோன்றியுள்ளது. மூன்று தசாப்தங்களுக்கு மேல் எமது சமூகத்தைச் சீரழிந்து வந்த குரூர பயங்கரவாதத்திலிருந்து எமது பிள்ளைகளை மீட்பதே மிக முக்கியமாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply