இலங்கைக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க பிரான்ஸ் ஆர்வம்
இலங்கையின் வடபகுதியில் நிகழும் யுத்தம் ஒரு முடிவுக்கு வர இருப்பது தனக்கு திருப்தியளித்திருப்பதாகத் தெரிவித்த பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் பேர்னாட் கொச்னர், தனது நாட்டிலிருந்து எவ்வகையான மானிதாபிமான உதவுகள் இலங்கைக்கு தேவை என்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவுடன் நேற்றைய தினம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய போது ஆர்வமாகக் கேட்டுக்கொண்டார்.
மோதல்கள் இடம்பெற்று வரும் வலயங்களில் சிக்கியுள்ள பொதுமக்கள் நிலவரம் குறித்து தமது அரசாங்கம் அதிக கரிசனை கொண்டுள்ளதெனத் தெரிவித்த பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர், யுத்த முன்நகர்வுகளின் போது பொதுமக்கள் பாதுகாப்பு எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகின்றது என்பது குறித்தும் ரோஹித்த பொகொல்லாகமவிடம் கேட்டறிந்தார். பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து படை முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமான மீட்புப் பணிகள் திருப்தியளிப்பதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டதாக அமைச்சர் பொகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply