ஜெயந்திநகரில் சூசையை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்

கடற்புலிகளின் தளபதி சூசையை குறிவைத்து இன்று (ஒக்.31) இலங்கை நேரம் பிற்பகல் 2.25க்கு ஜெயந்திநகரில் அவரது இருப்பிடம் ஒன்றுக்கு விமானப்படை குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. வன்னிக் களத்திலுள்ள இராணுவ புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மேற்படி விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் இணையத்தளம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இத்தாக்குதல் கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயந்திநகர் எனும் இடத்தில் சூசை பதுங்கி இருப்பதாக நம்பத்தகுந்த உளவுத்தகவல் கிடைத்ததை தொடர்ந்தே இத்தாக்குதலை நடத்தியதாக விமானப்படைப் பேச்சாளர் வின்கமான்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இத்தாக்குதல் குறித்து புலிகள் தரப்பில் இதுவரை எதுவித கருத்தும் வெளியிடப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply