மோதல்கள் நீண்டுசெல்லுமாயின் வெளிநாட்டுப் படையினர் இலங்கை விடயத்தில் தலையிடுவதற்கான சாத்தியமுண்டு : விமல் வீரவன்ச
விடுதலைப் புலிகளை அரசாங்கப் படைகள் நீண்டநாட்கள் ஓரங்கட்டி வைக்காமல் விரைவில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமென தேசிய விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இராணுவத்தினர் முன்னெடுத்திருக்கும் மனிதநேய நடவடிக்கைகளை நிறுத்திவைத்திருப்பதானது, பாதுகாப்புத் தரப்பில் கூடுதலான இழப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இராணுவத்தினர் தமது அடிகளைப் பின்நகர்த்தாது பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
“யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டால், மோதல் சூழ்நிலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி கவனத்தில்கொள்ள வேண்டும். எஞ்சியிருக்கும் பகுதிகளில் ஒழிந்திருக்கும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வதற்கும் இராணுவத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைப் புலிகள் தற்பொழுது 50 சதுரக் கிலோமீற்றர் பரப்புக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டனர்” என்றார் அவர்.
மோதல்களை முடிப்பதற்கான காலம் நீண்டுசெல்லுமாயின் வெளிநாட்டுப் படையினர் இலங்கை விடயத்தில் தலையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விமல் வீரவன்ச கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply