பிரான்ஸ் நாட்டில் பொலிஸார் ஒருவர் இலங்கை தமிழ் இளைஞர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கசிபவை
மேற்படி பிரஞ்ச் பொலிஸாரின் கொலை விடயமாக சில தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாகவது, குறிப்பிட்ட சில நபர்கள் ஒருவரைக் கடத்திச் சென்று மாடி வீடொன்றில் வைத்து அடித்து சித்திரவதை செய்ததாகவும், சித்திரவதைக்கு உள்ளான நபர் உரத்து ஓலமிட்டதை தொடர்ந்து அயல் வீட்டில் வசிக்கும் பிரெஞ்சுக்காரர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அப்பிரதேசத்தில் சிவில் உடையில் கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர் ஸ்தலத்திற்கு விரைந்ததாகவும் கூறப்படுகின்றது.
அங்கு சிவில் உடையில் விரைந்த பொலிஸாரை மேற்படி குழுவினர் தாக்க முற்பட்டபோது அவர் தனது கைத்துப்பாக்கியை பாதுகாப்பின் நிமிர்த்தம் எடுத்த போது துப்பாக்கியை பறித்தெடுத்த குழுவினரில் ஒருவர் பொலிஸாரைச் சுட்டுக்கொன்றதாகவும் தெரியவருகின்றது.
மேற்படி சித்திரவதை மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள்
1. இங்கிலாந்தில் லண்டனை வதிவிடமாகக் கொண்ட மோகன் (இவரே இக்குழவின் தலைவர் என பேசப்படுகின்றது)
2. இலங்கையில் சாவகச்சேரியை சேர்ந்தவரும் ஜேர்மனிய பிரயாவுரிமைபெற்று லண்டன் குரோடனில் வசித்து வருபவருமான கணேஸ் என்று அழைக்கப்படும் கணேசானந்தசிவம்
3. இலங்கையில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவரும் லண்டனில் மில்டன் கீற் என்னும் இடத்தில் வசித்து வருபவருமாகிய ஒரு குழந்தையின் தந்தையாகிய ரஞ்சன்.
4 இலங்கையில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவரும் லண்டன் மில்டன் கீற் எனும் இடத்தில் வசித்துவரும் துசா ஆகியோருடன் பிரான்ஸை வசிப்பிடமாக கொண்ட சிலரும் அடங்குவதாகவும் அவர்களில் ஒருவர் பெண் எனவும் தெரியவருகின்றது.
மேற்படி நபர்கள் புலிகளிடம் இராணுவப்பயிற்சி பெற்றவர்கள் எனவும் தொடர்ந்தும் ஐரோப்பாவில் புலிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணி அங்கும் செயற்பட்டு வருவதுடன் தெருச்சண்டித்தனம் செய்பவர்கள் எனவும் அண்மையில் ஜெனிவா நகரில் தீமூட்டி தற்கொலை செய்து கொண்ட முருகதாஸினது நெருங்கிய சாகாக்கள் எனவும் பேசப்படுகின்றது.
பிரஞ்சு பத்திரிகையான பரிஸியன் என்ற பத்திரிகையில் சம்பவம் நடைபெற்ற இடங்களின் புகைப்படங்களுடன் செய்தி வந்தள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது.
நன்றி: இலங்கை நெற்
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply