திருமலைக்கு சென்றுள்ள இந்திய கப்பல்களை திரும்ப அழைக்கவும்: ஜெயலலிதா

இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு சென்றுள்ள இந்திய கப்பல்கள் இரண்டையும் திரும்ப அழைக்குமாறு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கோரியுள்ளார். இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.திருகோணமலையில் நடக்கும் பயிற்சியில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு கூடாது என்று வலியுறுத்தி பல முறை கடிதம் எழுதியுள்ளேன்.

இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் உள்ளது.

இலங்கையுடனான கடல்சார் ஒத்துழைப்பு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கவே உதவும். எனவே, உடனடியாக இலங்கைக்கு கூட்டு பயிற்சியில் ஈடுபட சென்றுள்ள 2 இந்திய கப்பற்படை கப்பல்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும், இலங்கையுடன் எந்த கூட்டு பயிற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்று பாதுகாப்பு துறைக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply