பல்கலை அனுமதி பெறும் வன்னி மாணவர்களின் விண்ணப்பங்களை உள்வாங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை
வன்னியில் தற்போது நிலவும் அசாதாரண சூழ் நிலைகளையடுத்து அங்குள்ள பல்கலைக்கழக அனுமதி பெறக்கூடிய மாணவர்களின் நிலைமையினைக் கருத்திற் கொண்டு அவர்களைப் பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
வன்னியில் உள்ள பல்கலைக்கழக அனுமதி பெறவிருக்கும் மாணவர்களினாலும் அவர்கள் நலன் சார்ந்த கல்விமான்களினாலும் இவ்விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்ட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
வன்னி மாவட்டங்களில் இருந்து க. பொ. த. உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழக அனுமதி பெறக்கூடிய மாணவர்கள் தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப் பட்ட உயரதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply